பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை..

சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்​துகளில், 14 பவுண்டரி​களு​டன் 103 ரன்​கள் எடுத்து வெளி​யேறி​னார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை..
Published on

டாக்காவில் உள்ள மிர்பூர் ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடி பாகிஸ்தான் அணி 2 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில்  46 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்புக்கு 179 ரன்​கள் எடுத்த நிலையில் சான் அவைஸ் 85, அப்​துல்லா பாஸல் 37 ரன்​களு​டன் களத்தில் இருந்தனர்.

நேற்று 3 வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 100.3 ஓவர்​களில் 386 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது.  சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்​துகளில், 14 பவுண்டரி​களு​டன் 103 ரன்​கள் எடுத்து வெளி​யேறி​னார்.

அப்​துல்லா பாஸல் 60, கேப்​டன் ஷான் மசூத் 9, சவுத் ஷகீல் 0, சல்​மான் ஆகா 58, முகமது ரிஸ்​வான் 59, நோமன் அலி 2, ஷாகின் ஷா அப்ரிடி 13, ஹசன் அலி 6 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்தனர்.

வங்​கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்களை வீழ்த்தியும், தஸ்​கின் அகமது, தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களையும் வீழ்த்தியுள்ளனர்.

2 வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 27 ரன்கள் முன்னிலையுடன் 3 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது.

மஹ்​முதுல் ஹசன் ராய் 2 ரன்களும், ஷத்​மான் இஸ்​லாம் ரன் ஏதும் எடுக்​காமலும் களத்​தில் இருந்​தனர். 34 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள வங்​கதேச அணி 4-வது நாள் ஆட்​டத்தை இன்​று தொடர்ந்​து விளை​யாடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com