BANvPAK | 3வது போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

தஸ்கின் அகமது
தஸ்கின் அகமது
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும் வென்றன.

இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் தமிம் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 107 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 41 ரன்னும், சயிப் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். சல்மான் ஆகா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்106 ரன்னில் வெளியேறினார். சாத் மசூத் 38 ரன்னும், ஷஹீன் அப்ரிடி 37 ரன்னும் எடுத்தனர்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இறுதியில், பாகிஸ்தான் 50 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை என கைப்பற்றி அசத்தியது.

வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், நஹித் ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com