

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 413 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஷாண்டோ சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 33 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆசான் அவைஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். அப்துல்லா பசல் 60 ரன்னும், மொகமது ரிஸ்வான் 59 ரன்னும், சல்மான் ஆகா 58 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தஜ்ஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
27 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம் நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் அரை சதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஷாண்டோ 87 ரன்கள் எடுத்து அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 9 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்துள்ள நிலையில் டிரா செய்தது.
இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியின் அப்துல்லா பைசல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 66 ரன்கள் எடுத்தார். சல்மான் ஆகா 26 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வங்கதேசம் சார்பில் நஹித் ரானா 5 விக்கெட்டும், தஜ்ஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.