

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் வங்கதேசம் 2-1 என நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நேற்று சட்டோகிராமில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. டேன் கிளீவர் 28 பந்துகளில் 51 ரன்னும், கிளார்க் 37 பந்தில் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிக் கெல்லி 39 ரன்னும், ஜோஷ் கிளார்க்சன் ஆட்டமிழக்காமல் 27 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தவ்ஹித் ஹிரிதோய் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 27 பந்துகளில் 51 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில், வங்கதேசம் 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.