லிட்டன் தாஸ் அசத்தல் சதம்: 2வது டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 278 ரன்னுக்கு ஆல் அவுட்

முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
லிட்டன் தாஸ் அசத்தல் சதம்: 2வது டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 278 ரன்னுக்கு ஆல் அவுட்
Published on

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் சிலெட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் டக் அவுட்டானார்.

தன் ஜித் ஹசன் தமிம் 26 ரன்னும், மொமினுல் ஹக் 22 ரன்னும், ஷாண்டோ 29 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்னும் எடுத்தனர்.

லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 126 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com