

ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆர்.சி.பி.- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் பேச்சு தொடங்கிவிட்டது. ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளன.
ஐபிஎல் போட்டி இரவு 7.30 மணிக்குதான் தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என்றால் மட்டும் 3.30 மணிக்கு தொடங்கும்.
இரவு நடைபெறும் போட்டியில் 2-வது பந்து வீசும் அணிக்கு மிகுந்த சவால் காத்திருக்கும். ஏனென்றால், பனிப்பொழிவு காணப்படும். பனிப்மொழிவால் பந்து ஈரமாகி, பந்து வீச்சாளர்களுக்கு தொல்லை கொடுக்கும். பந்து கையில் நிற்காது. மேலும், ஈரமாகிவிடுவதால் பந்தை தனது ஷேப்பை இழந்துவிடும். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிடும். இதனால் டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் முதலில் பந்து வீச விரும்பும்.
பந்தை மாற்ற கோரிக்கை விடுத்தால் அதுவும் எடுபடாது. இந்த நிலையில்தான் இதற்காக ஒரு விதி வகுக்கப்பட்டுள்ளது.
அந்த விதியின்படி,
2-வது பந்து வீசும் அணி 10 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், பந்தின் தன்மை (Shape) மாறியுள்ளது. இதனால் பந்தை மாற்ற கேப்டன் வலியுறுத்த முடியும். அதன்படி நடுவர், பந்தை மாற்றி வழங்குவார். இதை 10 ஓவருக்கு பின்னர்தான் கேட்க முடியும். அதுவும் பந்து வீசும் அணியின் கேப்டன் மட்டும்தான் கேட்க முடியும்.
ஓவருக்கு மத்தியில் கேட்க முடியாது. ஓவர் முழுமையாக முடிந்த பின்னர்தான் கேட்க முடியும். நடுவர் பந்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் எந்த நேரத்திலும் பந்தை மாற்ற முடியும்.
இந்த விதியின் மூலம் இரவு நேர போட்டியில் 2-வது பந்து வீசும் அணி இன்னும் கூடுதலாக பந்து வீச்சில் கவனம் செலுத்த முடியும்.