ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடர்: அணிக்கு திரும்பிய பாபர் அசாம், ஷதாப் கான்

முதல் ஒருநாள் போட்டி மே 30-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடர்: அணிக்கு திரும்பிய பாபர் அசாம், ஷதாப் கான்
Published on

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மே 30-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2வது ஒருநாள் போட்டி ஜூன் 2-ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஜூன் 4-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இரு போட்டிகளும் லாகூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி உடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாபர் அசாம், ஆல் ரவுண்டர் ஷதாப் கான் மற்றும் நசீம் ஷா அணிக்கு திரும்பியுள்ளனர். ஷாஹீன் ஷா அப்ரிடி கேப்டனாக களமிறங்குகிறார்.

ஷாஹீன் ஷா அப்ரிடி, சல்மான் ஆகா, அப்துல் சமது, அப்ரார் அகமது டானியல், அராபத் மினாஸ், பாபர் அசாம், ஹரிஸ் ராப், மாஸ் சதாகத், காஜி கோரி, நசீம் ஷா, ரோஹைல் நசீர், ஷாஹிப்சதா பர்ஹான், ஷதாப் கான், ஷமைல் ஹுசைன், சுபியான் மொகிம்.

X

Maalai Malar
www.maalaimalar.com