4 பாகிஸ்தான் வீரர்களுடன் மோசமான சாதனையை பகிர்ந்த பாபர் அசாம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.
4 பாகிஸ்தான் வீரர்களுடன் மோசமான சாதனையை பகிர்ந்த பாபர் அசாம்
Published on

ஹம்பன்டோட்டா:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மண்ணில் மோதுகிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.

இதனையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மெகா வெற்றியை ருசித்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 4-வது முறையாகவும் கேப்டனாக 2-வது முறையாகவும் டக் அவுட் ஆகியுள்ளார்.

இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com