டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதம்: விராட் கோலி, வார்னர் வரிசையில் இணைந்த பாபர் அசாம்

டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார்.
டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதம்: விராட் கோலி, வார்னர் வரிசையில் இணைந்த பாபர் அசாம்
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம். தற்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

கராச்சியில் நடந்த லீக் போட்டியில் முதலில் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெஷாவர் சால்மி 18.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பெஷாவர் அணி கேப்டன் பாபர் அசாம் 51 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை பூர்த்தி செய்த உலகின் 3-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார்.

டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும், ஆசிய அளவில் விராட் கோலிக்கு (107 அரைசதங்கள்) அடுத்தபடியாக 2-வது இடத்திலும் உள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் (116), விராட் கோலி (107) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இந்த அரை சதங்கள் அனைத்தும் சர்வதேச போட்டிகள் மற்றும் பல்வேறு லீக் தொடர்களில் சேர்த்து பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com