Axar Patel | 2-ஆவது வீரர்... டெல்லி அணிக்காக அக்சர் படேல் புது சாதனை

டெல்லி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Axar Patel | 2-ஆவது வீரர்... டெல்லி அணிக்காக அக்சர் படேல் புது சாதனை
Published on

டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் , அந்த அணிக்காக 100 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஐதராபாத்தில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக அக்சர் விளையாடிய 100வது ஐபிஎல் போட்டியாகும்.

அவருக்கு முன்பு, ரிஷப் பண்ட் மட்டுமே டெல்லி கேபிட்டல்ஸ் (முன்னர் டெல்லி டேர்டெவில்ஸ்) அணிக்காக 100-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியிருந்தார்.

ஐதராபாத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ்-க்கு பிறகு கேப்டன் அக்சர் படேல் போட்டி குறித்து பேசினார்.

அப்போது அவர், "நாங்கள் முதலில் பந்துவீசுவோம். டாஸில் அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது; இருப்பினும், எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி - நான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. இன்றிரவு ஒரு வெற்றியுடன் இது முடியும் என நம்புகிறேன்.

சூழ்நிலையைப் பொறுத்து எங்களுக்கு ஒரு சமச்சீரான ஆடும் லெவன் தேவை. ஒரு பெரிய அணியை நிர்வகிப்பது கடினம், ஆனால் சிறந்த ஆடும் லெவனை தேர்ந்தெடுக்க முடியும், அது வீரர்களுக்கும் தெரியும். ஒரு மாற்றம்: அவுகிப் நபிக்கு பதிலாக நிதிஷ் ராணா களமிறங்குகிறார்," என்று டாஸுக்குப் பிறகு படேல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com