பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன்கள் குவித்து ஆல் அவுட்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன்கள் குவித்து ஆல் அவுட்
Published on

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. உணவு இடைவேளைக்கு பிறகு சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பாகிஸ்தான் கைப்பற்றியது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசி அசத்தினார். அவர் டேவிட் வார்னர் 164 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்தது.மிட்செல் மார்ஸ் 15 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com