ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.
ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி
Published on

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை- வங்கதேசம் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார். அதேவேளையில் 19ஆவது ஓவரில் முஷ்டாபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் விளாச இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக சைப் ஹாசன் 61 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com