அறிமுகமாகிறது 'ஆப்பிரிக்க கோப்பை' டி20 தொடர்- ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் புதிய அதிரடி

ஆப்பிரிக்க கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆப்பிரிக்க கோப்பை என்ற பெயரில் புதிய டி20 தொடரைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அறிமுகமாகிறது 'ஆப்பிரிக்க கோப்பை' டி20 தொடர்- ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் புதிய அதிரடி
Published on

ஆப்பிரிக்க கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆப்பிரிக்க கோப்பை என்ற பெயரில் புதிய டி20 தொடரைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் டி20 வடிவில் நடத்தப்படும்.

இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று பலமான அணிகள் நேரடியாகப் பங்கேற்கும். எஞ்சிய மூன்று அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

2026-ஆம் ஆண்டில் இதன் முதல் பதிப்பு ஒரு முக்கோணத் தொடராக (Tri-series) மட்டுமே நடைபெறும். இதில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் மட்டும் விளையாடும்.

அடுத்த ஆண்டு முதல் இது முழுமையான 6 அணிகள் பங்கேற்கும் தொடராக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நமீபியாவில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்க பிராந்திய மாநாட்டில் இந்தத் தொடரைத் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் கிரிக்கெட்டை வணிகரீதியாகவும் போட்டித்தன்மையுடனும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை இந்த மூன்று நாடுகளும் இணைந்து நடத்தவுள்ள நிலையில், இந்தத் தொடர் ஒரு முன்னோட்டமாக அமையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com