

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே நியூ சண்டிகரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது.
இதையடுத்து, நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார். பிரின்ஸ் யாதவ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.