டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்

நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்
Published on

டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.

174 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு சென்ற ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரூப் D பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com