ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருண்டது ஆப்கானிஸ்தான்

டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருண்டது ஆப்கானிஸ்தான்
Published on

புலவாயோ:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்துள்ளது. மழையால் போட்டி முன்னதாக முடிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com