

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் அதிரடியில் இறங்கியது.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இது அவரது 9வது சதமாகும். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் சதமடித்து 125 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் - இஷான் கிஷன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 224 ரன்கள் சேர்த்தது.
சதமடித்து அசத்திய சுப்மன் கில் 154 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 49.5 ஓவரில் 402 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆப்கானிஸ்தான் சார்பில் கரோட்டே 4 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் எடுத்தனர்.