டி20 உலகக் கோப்பை: மோசமான சாதனை படைத்த ஆதில் ரஷீத்

இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை: மோசமான சாதனை படைத்த ஆதில் ரஷீத்
Published on

மும்பை:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி மும்பையில் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் வீசிய பந்துகளில் இந்திய அணி வீரர்கள் 4 சிக்சர்களைப் பறக்கவிட்டிருந்தனர்.

இதன்மூலம் சர்வதேச டி20 அரங்கில் 200க்கும் அதிகமான சிக்சர்களை விட்டுக் கொடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com