IPL 2026 | ரோகித், சஞ்சு சாம்சன் மோசமான சாதனையை முந்திய அபிஷேக் சர்மா

நேற்றைய போட்டியிலும் அபிஷேக் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
IPL 2026 | ரோகித், சஞ்சு சாம்சன் மோசமான சாதனையை முந்திய அபிஷேக் சர்மா
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஒரே ஆண்டில் அதிக முறை டக் அவுட் பேட்டர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா தேவையற்ற சாதனை படைத்தார்.

2026 ஐ.பி.எல். தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை 7 போட்டிகளில் டக் அவுட் ஆகி இருக்கிறார். இசன் மூலம் அவர் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டயலில் அபிஷேக் சர்மா தற்போது ரோகித் சர்மாவை அபிஷேக் சர்மாவை பின்னுக்கு தள்ளினார்.

நேற்றிரவு (ஏப்ரல் 13) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா ஏமாற்றம் அளித்தார். ராஜஸ்தான் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை அபிஷேக் சர்மா அடித்த நிலையில், ரவி பிஷ்னோய் தனக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட்டாக மாற்றினார். இதன் காரணமாக அபிஷேக் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு 32 இன்னிங்ஸில் ரோகித் சர்மா 6 டக் அவுட் மற்றும் 2024-ஆம் ஆண்டு 32 இன்னிங்ஸில் சஞ்சு சாம்சனின் 6 டக் அவுட் என இருவரின் மோசமான சாதனையை முறியடித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5 இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா மொத்தத்தில் 129 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இவரது சராசரி 25.80 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 215.80 ஆக உள்ளது. இதில் அவரது சிறந்த ஸ்கோர் 74 ஆகும்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்தது. இதை் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயஸ்ல் அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 57 ரன்களில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com