IPL 2026 | ஐ.பி.எல். வரலாற்றில் முதல் இந்தியர்... அபிஷேக் சர்மாவின் வேற லெவல் சாதனை

துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்களை விளாசினார்.
IPL 2026 | ஐ.பி.எல். வரலாற்றில் முதல் இந்தியர்... அபிஷேக் சர்மாவின் வேற லெவல் சாதனை
Published on

இஷான் கிஷன் மற்றும் மலிங்காவின் துணிச்சலான ஆட்டம் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஐதராபாத்தில் நடந்த ஆர்.சி.பி. அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்களது சொந்த மண்ணில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது.

ஐதராபாத் அணி இமாலய ஸ்கோர் அடிக்க அடித்தளமாக இருந்த துவக்க வீரரான அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். மேலும், டி20 தொடர்கள் அல்லது போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றார். ஒட்டுமொத்தமாக, கிறிஸ் கெய்லுக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் ஆனார் அபிஷேக்.

துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 56 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) அடித்தார். இந்த இன்னிங்ஸில் இவர் 20 பந்துகளில் மற்றொரு அரைசதம் கடிந்தார். அதே நேரத்தில் , துணை கேப்டன் கிஷன், துல்லியத்தையும் சாமர்த்தியத்தையும் வெளிப்படுத்தி, இடைவெளிகளை கண்டறிந்து வெறும் 44 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளாசென் 24 பந்துகளில் 51 ரன்களை விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை எட்டியது. இமாலய இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்த நிலையில், ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com