டி20 உலகக் கோப்பை: புது தோற்றத்துடன் ஹர்திக் பாண்ட்யா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.இவர் அடிக்கடி தனது ஹேர் ஸ்டைலை மாற்றி ரசிகர்களால் ஈர்க்கப்படுவார்.
டி20 உலகக் கோப்பை: புது தோற்றத்துடன் ஹர்திக் பாண்ட்யா
Published on

டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாளையில் இருந்து குரூப் லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறன. 20 அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகியுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்புவார்கள். அதேவேளையில் முக்கியமான தொடர் மற்றும் உலகம் முழுவதும் போட்டியை பார்க்க இருப்பதால், வீரர்கள் தங்களை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்க்க விரும்புவார்கள்.

அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா தலை முடி முழுவதும் வெள்ளையாக தோற்றமளிக்கும் வகையில் ஹேர் கட் செய்து, புது தோற்றத்துடன் களம் இறங்க இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா எப்போதும் தன்னை ஸ்டைலாக வெளிப்படுத்த விரும்பக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com