IPL 2026 | ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... சுவாரஸ்ய தகவல்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மைல்கல்லாக, முதன்முறையாக 19-வது சீசனான ஐபிஎல் 2026 தொடரில் அனைத்து 10 அணிகளும் இந்திய கேப்டன்களின் தலைமையில் களம் இறங்குகின்றன.
IPL 2026 | ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... சுவாரஸ்ய தகவல்
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மைல்கல்லாக, முதன்முறையாக 19-வது சீசனான ஐபிஎல் 2026 தொடரில் அனைத்து 10 அணிகளும் இந்திய கேப்டன்களின் தலைமையில் களம் இறங்குகின்றன. மும்பையில் நடந்த அதிகாரப்பூர்வ கேப்டன்கள் சந்திப்பில் இது உறுதி செய்யப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளுக்கும் இந்தியர்களே தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. இதில் ரியான் பராக் (RR), இஷான் கிஷன் (SRH) மற்றும் அஜிங்க்யா ரஹானே (KKR) ஆகியோர் இந்த சீசனில் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com