4வது வெற்றியை சுவைக்க மல்லுக்கட்டபோகும் சென்னை- குஜராத் அணிகள்: இன்று வெல்லப்போவது யார்?

4-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4வது வெற்றியை சுவைக்க மல்லுக்கட்டபோகும் சென்னை- குஜராத் அணிகள்: இன்று வெல்லப்போவது யார்?
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது வெற்றியை குறிவைத்து சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

இதில் சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பிய

னான சென்னை சூப்பர் கிங்ஸ். முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

சென்னை அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூருவிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு டெல்லி, கொல்கத்தா அணிகளை தொடர்ந்து வீழ்த்தியது. அடுத்து ஐதராபாத்திடம் வீழ்ந்தது. கடந்த ஆட்டத்தில் 103 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்தது.

சென்னை அணியில் சஞ்சு சாம்சன் (2 சதம் உள்பட 293 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். மற்றவர்களில் சர்ப்

ராஸ் கான் (161 ரன்) தவிர்த்து யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஷிவம் துபே, கேப்டன் ருதுராஜ் கெய்க் வாட், டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் அன்ஷூல் கம்போஜ் (14 விக்கெட்), ஜாமி ஓவர்டான் (9), நூர் அகமது, அகீல் ஹூசைன் வலுசேர்க்கின் றனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் முன்னாள் கேப்டன் டோனி களம் இறங்குவாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

குஜராத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் பணிந்தது. அதன் பிறகு டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகளை வரிசையாக பதம் பார்த்தது. அடுத்து மும்பையிடம் உதை வாங்கியது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் விராட் கோலி ரன் கணக்கை தொடங்கும் முன்பாக கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் (3 அரைசதம் உள்பட 297 ரன்), சாய் சுதர்சன் (ஒரு சதம். ஒரு அரைசதம் உள்பட 235), ஜோஸ் பட்லர் (2 அரைச தம் உள்பட 231), வாஷிங்டன் சுந்தரும் (ஒரு அரைசதம் உள்பட 156), பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (12 விக்கெட்), ககிசோ ரபடா (10), முகமது சிராஜ், ரஷித் கான் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மும்பையை வீழ்த்திய உற்சாகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் கால்பதிக்கிறது. அடுத்தடுத்து சந்தித்த தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப தேவை யான வியூகத்துடன் குஜராத் களம் இறங்கும். 4-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com