Candidates Chess: புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தார் வைஷாலி

நடப்பு சீசனில் வைஷாலி 3-வது வெற்றி பெற்றுள்ளார்.
Candidates Chess: புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தார் வைஷாலி
Published on

கேண்டிடேட்ஸ் செஸ் 9-வது சுற்றுப் போட்டியில் நேற்று மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சக நாட்டு வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கை வீழ்த்தினார்.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, நடப்பு சாம்பியன்களுடன் மோதி, அடுத்த சாம்பியன் ஆகும் வாய்ப்பு பெறுவர்.

நேற்று நடந்த மகளிர் பிரிவு 9-வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சக நாட்டு வீராங்கனையான திவ்யா தேஷ்முக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அபார வெற்றி பெற்றார்.

இதன்மூலம் நடப்பு சீசனில் 3-வது வெற்றி பெற்றுள்ள வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சீனாவின் ஜூ ஜினெரும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com