Candidates Chess: 2ம் இடத்தில் நீடிக்கிறார் வைஷாலி

நடப்பு சீசனில் வைஷாலி 2-வது வெற்றி பெற்றுள்ளார்.
Candidates Chess: 2ம் இடத்தில் நீடிக்கிறார் வைஷாலி
Published on

கேண்டிடேட்ஸ் செஸ் 7வது சுற்றுப் போட்டியில் நேற்று மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீனாவின் டான் ஜாங்யியை வீழ்த்தினார்.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, நடப்பு சாம்பியன்களுடன் மோதி, அடுத்த சாம்பியன் ஆகும் வாய்ப்பு பெறுவர்.

நேற்று நடந்த மகளிர் பிரிவு 7-வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சீனாவை சேர்ந்த முன்னாள் சாம்பியன் டான் ஜாங்யி உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அபார வெற்றி பெற்றார்.

இதன்மூலம் நடப்பு சீசனில் 2-வது வெற்றி பெற்றுள்ள வைஷாலி 4 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், ரஷ்யாவின் கேதரினா லாக்னோ உடன் மோதி 93 நகர்த்தல்களுக்கு பின் டிரா செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com