Candidates Chess: பட்டம் வெல்வது வைஷாலியா, கஜகஸ்தான் வீராங்கனையா?

நடப்பு சீசனில் வைஷாலி 4 வெற்றிகள் பெற்றுள்ளார்.
Candidates Chess: பட்டம் வெல்வது வைஷாலியா, கஜகஸ்தான் வீராங்கனையா?
Published on

கேண்டிடேட்ஸ் செஸ் 13-வது சுற்றுப் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீன வீராங்கனை டான் சோங்கி உடனான போட்டியை டிரா செய்தார்.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, நடப்பு சாம்பியன்களுடன் மோதி, அடுத்த சாம்பியன் ஆகும் வாய்ப்பு பெறுவர்.

மகளிர் பிரிவு 13-வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சீன வீராங்கனை டான் சோங்கி உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி போட்டியை டிரா செய்தார்.

இதன்மூலம் நடப்பு சீசனில் வைஷாலி 4 வெற்றிகளுடன் 7.5 புள்ளிகள் பெற்று கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாராவுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இன்று நடைபெறும் கடைசி சுற்றுப் போட்டியில் பட்டம் வெல்லப் போவது யார் என தெரிந்துவிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com