

2026 ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், அசோக் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து குஜராத் பேட்டிங் செய்யவுள்ளது.
கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குஜராத் இரண்டு போட்டிகளில் வெற்றியும், இரண்டில் தோல்வியையும் தழுவியுள்ளது. இதனால் இரு அணிகளுமே வெற்றிப் பெற முயற்சிக்கும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.