தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி

முதலில் விளையாடிய வங்காளதேச அணி 314 ரன்கள் குவித்திருந்தது.
வங்காளதேச அணி வீரர்கள்
வங்காளதேச அணி வீரர்கள்
Published on

செஞ்சூரியன்:


வங்காளதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில்  சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணியினர் அதிரடியாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 77 ரன்கள் குவித்தார். லிட்டன் தாஸ், யாசீர் அலி ஆகியோர் அரை சதம் அடித்தனர். 

பின்னர் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. 48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிக பட்சமாக, ரஸ்ஸி வான் டெர்டஸ்ஸன் 86 ரன்களும், டேவிட் மில்லர் 79 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர். இதையடுத்து வங்காள தேச அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com