உலக கோப்பை வில்வித்தை போட்டி- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது

கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஜோடிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
அபிஷேக் வர்மா,  ஜோதி சுரேகா வென்னம்
அபிஷேக் வர்மா,  ஜோதி சுரேகா வென்னம்
Published on

பாரீஸ்:

உலக கோப்பை வில்வித்தை போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற கலப்பு அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

X

Maalai Malar
www.maalaimalar.com