கனடா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடந்து வருகிறது.
tanya hemanth
Published on

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், தன்யா ஹேமந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் சுற்று போட்டிகள் நடந்தன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், பிரான்சின் அன்னா டட்ரநோவா உடன் மோதினார்.

ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஆகாஷ் காஷ்யப் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 21-16, 21-18 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் தீஷா குப்தாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com