

செல்சி மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் மில்லி பிரைட் தனது 32-வது வயதில் அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
செல்சி அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியுள்ள இவர், 314 போட்டிகளில் விளையாடி 20 கோப்பைகளை வென்றுள்ளார். இதில் 8 மகளிர் சூப்பர் லீக் பட்டங்கள், 6 எஃப்ஏ கோப்பைகள் மற்றும் 4 லீக் கோப்பைகள் ஆகியவை அடங்கும்.
இங்கிலாந்து அணிக்காக 2016-ல் அறிமுகமான இவர், 88 போட்டிகளில் விளையாடி 6 கோல்கள் அடித்திருந்தார்.
2023 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த 2024 யூரோ போட்டிக்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார்.
மில்லி பிரைட்டின் சிறப்பான பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில், மே 16 அன்று ஸ்டாம்போர்டு பிரிட்ஜில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக நடைபெறும் இந்த சீசனின் கடைசி WSL போட்டியின் போது அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், செல்சியா அறக்கட்டளையின் அறங்காவலராக அவர் கிளப்பில் தொடர்ந்து நீடிப்பார் என செல்சா அணி அறிவித்துள்ளது.