இங்கிலாந்து செஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த 11 வயது தமிழக மாணவி

இங்கிலாந்து வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 11 வயது பள்ளி மாணவி போதனா சிவானந்தன் 2,366 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து செஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த 11 வயது தமிழக மாணவி
Published on

சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்து வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 11 வயது பள்ளி மாணவி போதனா சிவானந்தன் 2,366 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

வடக்கு லண்டனில் வசிக்கும் அவர் 4 முறை இங்கிலாந்து பெண்கள் சாம்பியனான 25 வயது லான் யாவோவை (2,306 புள்ளி) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தனதாக்கினார். அத்துடன் போதனா ஒட்டுமொத்த உலக தரவரிசையில் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைந்து, 72-வது இடத்தை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய போதனா, ஐரோப் பிய கிளப் கோப்பை போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான உக்ரைனின் மரியா முசிசுக்கை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். இந்திய வம்சாவளியான போதனாவின் பெற்றோர் திருச்சியில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போதனாவை பாாரட்டியுள்ள இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அவருடன் செஸ் விளையாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் 11 வயதிலேயே இங்கிலாந்தின் நம்பர் ஒன் செஸ் வீராங்கனையாக உருவெடுத்துள்ள போதனாவுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். நாம் இருவரும் ஒரு முறை பிரதமருக்குரிய அதிகாரபூர்வ இல்லத்தில் இணைந்து விளையாடி இருக்கிறோம். எனவே அவரது முன்னேற்றம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com