கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் பந்தல்கால் நாட்டு விழா

தூக்க திருவிழா 16-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தூக்க நேர்ச்சை வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் பந்தல்கால் நாட்டு விழா
Published on

குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் மீன பரணி தூக்க திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிழா நடக்கும் கோவிலான வெங்கஞ்சி கோவிலில் நேற்று காலையில் பந்தல்கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதற்கான ஏற்பாட்டுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com