விரைவில் திருமணம் நடக்க வேண்டுமா? - அப்போ இவரை வழிபடுங்கள்

சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் சனி பகவானின் பாதிப்பு குறையும்.
Marriage
Published on

* கோவில்களில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்குமம் இட்டு, எலுமிச்சம் பழத்தை குத்தி வழிபட்டால் கண் திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

* குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணெய் சாற்றி, கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

* குடும்பத்தில் தாங்க முடியாத துன்பங்களால் கவலைப்படுபவர்கள், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

* பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

* கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும்.

* சோமவாரமான திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் சனி பகவானின் பாதிப்பு குறையும்.

* சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் பில்லி, சூனியம் போன்றவை நீங்கும்.

* வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்து, அவரது மூல மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com