வைகாசி விசாக திருவிழா: உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சவர்ணசுவாமிக்கும், காந்திமதிக்கும் திருக்கல்யாணம் நடந்ததையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்.
பஞ்சவர்ணசுவாமிக்கும், காந்திமதிக்கும் திருக்கல்யாணம் நடந்ததையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்.
Published on

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை பஞ்சவர்ணசுவாமியும், காந்திமதி அம்பாளும் பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் திருவீதி உலா வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு பஞ்சவர்ணசுவாமிக்கும், காந்திமதி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் காலை 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுகின்றனர். பின்னர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். 7-ந் தேதி(புதன்கிழமை) தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, செயல் அலுவலர் அருண்பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com