வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

30-ந் தேதி காலை தீர்த்தவாரி கலசாபிஷேகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் விஷேச பூஜைகளும் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு வருகிற 31-ந்தேதி வரை தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய பிரபை, சந்திர பிரபை, மங்களகிரி விமானம், ஆட்டுகிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி காலை தேரோட்டம் நிகழ்ச்சியும், 30-ந் தேதி காலை தீர்த்தவாரி கலசாபிஷேகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது.

31-ந்தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com