உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது: இன்று திருப்பாவாடை நிகழ்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இன்று திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது.
உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது: இன்று திருப்பாவாடை நிகழ்ச்சி
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி காலையில் பட்டர்கள் காவிரியில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் எடுத்து வந்தனர்.

கோவிலுக்குள் வந்ததும் வெள்ளிக்குடத்தில் கொண்டு வரப்பட்ட நீரை தங்க குடத்திற்கு மாற்றினார்கள். அங்கில் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணிக்கு அங்கில் சுத்தம் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com