உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருவடி சேவை
Published on

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கடந்த 21-ந்தேதி நவராத்திரி உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலதஸ்தானத்தில் புறப்பாடாகி கொலு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நவராத்திரி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் நாளான நேற்று திருவடி சேவை நடந்தது.

இதனால் நேற்று மாலை 4.30 மணியளவில் தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் புறப்பாடாகி நவராத்திரி மண்டபத்துக்கு 5 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தாயார் திருவடி சேவை அளித்தார். வருடத்திற்கு ஒரு முறை இந்த திருவடி சேவை நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்தனர். வருகிற 29-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று தாயார் மாலையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com