Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.7.2026 - இந்த ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

ரிஷபம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரும்.

மிதுனம்

கடன் சுமை குறையும் நாள். கனவு பலிதமுண்டு. பொதுவாழ்வில் புகழ்கூடும். பிள்ளைகளால் வருமானங்கள் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய்திகள் வந்துசேரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டியநாள். செலவுகள் அதிகரிக்கும். சொத்துகளாலும், சொந்தங்களாலும் பிரச்சனை உண்டு.

கன்னி

காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். நண்பர்கள் பகையாவர். பிறர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

துலாம்

உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோக உயர்வு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். தொழிலில் கூடுதல் லாபம் கிட்டும்.

விருச்சிகம்

வரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து விற்பனையால் ஆதாயம் உண்டு.

தனுசு

நன்மைகள் நடைபெறும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள். பயணங்கள் பலன் தரும்.

மகரம்

இடமாற்றத்தால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

யோகமான நாள். வாழ்க்கைத்தரம் உயரும். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

மீனம்

செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் நன்மை ஏற்படும். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். மதியத்திற்கு மேல் நல்ல தகவல் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com