Today Rasipalan: இன்றைய ராசிபலன் 26.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்கு செல்ல வேண்டிய நாள். வரவு திருப்தி தரும் என்றாலும் விரயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.

ரிஷபம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்

யோகமான நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

கடகம்

சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.

கன்னி

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.

துலாம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பாராத வரவு உண்டு.

விருச்சிகம்

பொருளாதார நிலை உயரும் நாள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும்.

தனுசு

லாபகரமான நாள். தேவைகள் பூர்த்தியாகும். பயணம் பலன் தரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். முக்கிய புள்ளிகளின் ஆதரவு உண்டு.

மகரம்

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எப்படி நடக்குமென்று நினைத்த காரியம் நல்ல விதமாக முடிவடையும்.

கும்பம்

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். எதையும் யோசித்து செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களைப்பற்றி குறை கூறலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com