Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண கனவுகள் நனவாகும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு உண்டு. வேலை வாய்ப்பிற்காக செய்த முயற்சி கைகூடும்.

ரிஷபம்

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பயண வாய்ப்பு கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

கடகம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. தொழில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டு.

கன்னி

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சனை தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

துலாம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அயல்நாட்டிலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.

விருச்சிகம்

நல்லது நடக்கும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவி செய்வர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும்.

மகரம்

தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.

கும்பம்

எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிட்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com