Today Rasipalan: இன்றைய ராசிபலன் 05.05.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
rasipalan
rasipalan
Published on

மேஷம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்ளை தவிர்க்கவும். பிறருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியும்.

ரிஷபம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்பே செலவு காத்திருக்கும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மிதுனம்

புகழ் கூடும் நாள். தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி உண்டு. பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

கடகம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தூரதேசப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.

சிம்மம்

வளர்ச்சி கூடும் நாள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.

கன்னி

மகிழ்ச்சி ஏற்படும் நாள். வியாபார விரோதம் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

துலாம்

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

விருச்சிகம்

பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காணும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

தனுசு

நாடி வந்தவர்களுக்கு நன்மை செய்து மகிழும் நாள். சகோதர்களின் உதவி கிட்டும். நேற்றைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்துசேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கும்பம்

தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

மீனம்

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். துணிந்து எடுத்த முடிவில் வெற்றி கிட்டும். பெரியவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com