Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 ஏப்ரல் 2026: குருபகவானுக்கு திருமஞ்சன சேவை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 ஏப்ரல் 2026: குருபகவானுக்கு திருமஞ்சன சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-26 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி இரவு 7.32 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : மூலம் காலை 7.17 மணி வரை பிறகு பூராடம்

யோகம் : சித்தயோம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் ரதோற்சவம். கோவில்பட்டி ஸ்ரீ சுவாமி சப்பரத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. ஸ்ரீ சென்னமல்லீசுவரர் விடையாற்று உற்சவம். ஒழுகைமங்கலம், சமயபுரம் கோவில்களில் ஸ்ரீ மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி. பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் ஏக சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல் சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திராத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை.

ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார், திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-யோகம்

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-துணிவு

கடகம்-ஆர்வம்

சிம்மம்-நற்செயல்

கன்னி-ஜெயம்

துலாம்- லாபம்

விருச்சிகம்-நிம்மதி

தனுசு- புகழ்

மகரம்-போட்டி

கும்பம்-பொறுமை

மீனம்-கண்ணியம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com