Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஜூலை 2026: துர்கையம்மன் கோவில்களில் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Durgai amman
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-24 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி காலை 8.06 வரை பிறகு நவமி

நட்சத்திரம் : ரேவதி நண்பகல் 12.24 வரை பிறகு அசுவினி

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி திருப்புளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அன்பு

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - இன்பம்

கடகம் - மகிழ்ச்சி

சிம்மம் - பரிவு

கன்னி - பாசம்

துலாம் - நற்சொல்

விருச்சிகம் - சாந்தம்

தனுசு - சிந்தனை

மகரம் - விவேகம்

கும்பம் - சிறப்பு

மீனம் - வரவு

X

Maalai Malar
www.maalaimalar.com