Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 7 ஜூலை 2026: சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
shanmugar
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-23 (செவ்வாய்க்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சப்தமி காலை 9.30 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.06 வரை பிறகு ரேவதி

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

கலிக்காம நாயனார் குரு பூஜை

சுவாமிமலை பேராயிரம் முருகப் பெருமான் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கலிக்காம நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆதாயம்

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - புகழ்

கடகம் - நட்பு

சிம்மம் - உயர்வு

கன்னி - இரக்கம்

துலாம் - பரிவு

விருச்சிகம் - பண்பு

தனுசு - போட்டி

மகரம் - கண்ணியம்

கும்பம் - ஒழுக்கம்

மீனம் - சிறப்பு

X

Maalai Malar
www.maalaimalar.com