Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 மே 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 மே 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, சித்திரை-23 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி காலை 6.37 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : மூலம்பிற்பகல் 2.30 வரை பிறகு பூராடம்

யோகம் : மரண/அமிர்தயோகம்

ராகு காலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு

ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் தங்கத் தொட்டியில் சூர்ணாபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ அரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-லாபம்

ரிஷபம்-பாராட்டு

மிதுனம்-ஆதாயம்

கடகம்-உதவி

சிம்மம்-ஆர்வம்

கன்னி-உதவி

துலாம்-தெளிவு

விருச்சிகம்-உற்சாகம்

தனுசு-கீர்த்தி

மகரம்-வரவு

கும்பம்-சிறப்பு

மீனம்-உறுதி

X

Maalai Malar
www.maalaimalar.com