Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 ஜூன் 2026: குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 ஜூன் 2026:  குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, வைகாசி-23 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சஷ்டி இரவு 11.14 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : அவிட்டம் மறுநாள் விடியற்காலை 4.47 வரை பிறகு சதயம்

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 9 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்

தேய்பிறை. சஷ்டி விரதம் அஹோபில மடம் ஸ்ரீமத் 27-ஆவது பட்டம் அழகிய சிங்கரின் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம், திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை: ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சிந்தனை

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - வெற்றி

கடகம் - கடமை

சிம்மம் - லாபம்

கன்னி - பெருமை

துலாம் - உண்மை

விருச்சிகம் - கடமை

தனுசு - துணிவு

மகரம் - சாதனை

கும்பம் - பணிவு

மீனம் - ஜெயம்

X

Maalai Malar
www.maalaimalar.com