

பராபவ ஆண்டு, வைகாசி-16 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி நண்பகல் 12.54 வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 2.18 வரை பிறகு அனுஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வைகாசி விசாகம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பால் அபிஷேகம். திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தளிநாதர் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்பம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விருஷப சேவை. அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை. பழனி ஸ்ரீ ஆண்டவர் ரதோற்சவம். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - அமைதி
மிதுனம் - வரவு
கடகம் - அனுகூலம்
சிம்மம் - வரவு
கன்னி - தேர்ச்சி
துலாம் - யோகம்
விருச்சிகம் - தனம்
தனுசு - சிந்தனை
மகரம் - நலம்
கும்பம் - நற்செயல்
மீனம் - ஆசை