

பராபவ ஆண்டு, ஆனி-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி காலை 6.11 வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூராடம் (முழுவதும்)
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர்பவனி. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் பவனி. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.
மேஷம் - நன்மை
ரிஷபம் - நட்பு
மிதுனம் - ஜெயம்
கடகம் - இன்சொல்
சிம்மம் - ஈகை
கன்னி - களிப்பு
துலாம் - சாந்தம்
விருச்சிகம் - மாற்றம்
தனுசு - நிறைவு
மகரம் - ஆதாயம்
கும்பம் - தாமதம்
மீனம் - உயர்வு