Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 ஜூன் 2026: மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Madurai Meenakshi Amman
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-14 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 4.21 மணி வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : கேட்டை பின்னிரவு 2.43 வரை பிறகு மூலம்

யோகம் : மரண / அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்

மாத சிவராத்திரி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ரதோற்சவம். திருக்கோளக்குடி ஸ்ரீ சுகோளபுரீஸ்வரர் வெள்ளி விருஷப சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி வெண்ணெய்த் தாழி சேவை. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சாந்தம்

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - வெற்றி

கடகம் - வரவு

சிம்மம் - முயற்சி

கன்னி - ஆதரவு

துலாம் - அமைதி

விருச்சிகம் - போட்டி

தனுசு - உதவி

மகரம் - நன்மை

கும்பம் - தனம்

மீனம் - ஆர்வம்

X

Maalai Malar
www.maalaimalar.com